புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மகா சங்கமத்தில் குட்டையை குழப்பிய கண்ணன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி

விஜய் டிவியில் ஒரு மணி நேர மஹா சங்கமமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இத்தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒரு திருமணத்திற்காக கொடைக்கானல் வர இருக்கிறார்கள். அதேபோல் கோபியும் தனது மனைவி ராதிகாவுடன் ஹனிமூனுக்கு கொடைக்கானல் வந்துள்ளார்.

இந்நிலையில் மூர்த்தி தங்கி இருக்கும் அதே ஹோட்டலில் கோபியும் ரூம் புக் செய்துள்ளார். இந்த சூழ்நிலைகள் எதர்ச்சியாக கோபியை கண்ணன் பார்த்து விடுகிறார். உடனே மாமா என்று ஓடிச் சென்று அவரது ரூமில் ஆடி பாடி குதிக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

Also Read :பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகும் முதல் 8 பேர்.. களைகட்டிய சீசன்6

அப்போதுதான் ரூமில் இருந்த ராதிகா வெளியே வருகிறார். இதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். எங்க பாக்யா அக்காவை ஏமாத்திட்டு இந்த பொண்ணு கூட இருக்கீங்களா என்று கண்ணன் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார். இதைப் பார்த்து ராதிகாவும் கோபம் அடைகிறார்.

மேலும் கண்ணன் மூர்த்தி, ஜீவாவிடம் சென்று கோபி இங்கு ராதிகாவுடன் இருப்பதை சொல்ல உள்ளார். இதனால் கோபம் அடைந்த மூர்த்தி பெரிய பிரச்சனையே செய்ய உள்ளார். மேலும் எழில் தனது படவேலைக்காக பாக்யா, கோபியின் அப்பா, அம்மா, இனியா ஆகியோரை கொடைக்கானலுக்கு அழைத்து வருகிறார்.

Also Read :பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

இதனால் கோபிக்கு பல பிரச்சனைகள் வர இருக்கிறது. ஒருவர் ஒருவராக ராதிகாவை குத்தி காட்டி பேச அவருக்கு கோபம் அதிகமாகி எல்லாமே கோபியின் மீது பாய உள்ளது. ஏண்டா ஹனிமூனுக்கு வந்தோம் என்ற யோசனை செய்யும் அளவுக்கு கொடைக்கானலில் கோபிக்கு சம்பவம் காத்திருக்கிறது.

சென்ற மகா சங்கமத்திலேயே கோபி, கண்ணன் இடையே ஆன காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல் இப்போதும் பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒரு மணி நேர மகா சங்கமமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

Also Read :டிஆர்பி-யில் மல்லுக்கட்டும் சன், விஜய் டிவி.. டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட்!

Trending News