சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாக்ஸ் ஆபிஸில் அசுர வேட்டையாடும் காந்தாரா மொத்த வசூல்.. ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்த படம் இப்போது வரை ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது

மேலும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அசுர வேட்டையாடி உலக அளவில் மொத்தமாக 375 கோடியை வரிக் குவித்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்தார் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது.

Also Read: காந்தாரா பட வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் ரிஷப் ஷெட்டி.. பட வாய்ப்பை நிராகரித்து ஆணவப் பேச்சு

இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. வரும் நவம்பர் 24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காந்தாரா திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா அதன் பிறகு அந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றியால் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி அங்கும் கலக்கி உள்ளது. ஆகையால் தியேட்டர்களில் மட்டுமல்ல தற்போது ஓடிடி தளத்திலும் காந்தாரா மிரள விட போகிறது.

Also Read: தமிழ் படங்களை அலறவிட்ட 5 கன்னட படங்கள்.. தளபதியை டீலில் விட்ட அந்த படம்

இந்த படத்தின் மொத்த வசூல் 375 கோடியை தாண்டி இருக்கும் நிலையில் உலக சினிமாவையே காந்தாரா திருப்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் பின்னணி இசையும் அதிரடி சண்டை காட்சிகளும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது மட்டுமல்லாமல், செண்டிமெண்ட்க்கும் ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லாத படமாக ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் வேட்டை தொழில் போன்றவற்றை இதுவரை யாரும் சொல்லாத அளவுக்கு சுவாரசியமாக கூறியது தான் இந்த படத்தின் வெற்றி ஆக பார்க்கப்படுகிறது. 

Also Read: அடேங்கப்பா! பொன்னியின் செல்வன் வசூலை மெர்சலாக்கிய காந்தாரா.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Trending News