வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

காந்தாரா-2 படத்துக்கு இன்னும் பல மாசம் வெயிட் பண்ணனுமா.? எப்போ வெளியாகும் தெரியுமா?

யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் இருந்தபோது, காந்தாரா ஒரு மாபெரும் வெற்றியாக மாறி, 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. வெறும் 16 கோடியில், எடுக்கப்பட்ட படம், அதை விட பல மடங்கு வசூல் மழை பொழிய ரிஷப் ஷெட்டியின் மார்க்கெட், சர் என்று ஏறியது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. படத்தின் திரைக்கதை காட்சியமைப்புகள், சுவாரசியமான காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டவற்றால் காந்தாரா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இன்னும் ஒரு வர்ஷம் ஆகும்

மக்களின் ஆதரவை பார்த்த படக்குழு, இதன் செகண்ட் பார்ட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார்கள். பொதுவாக செகண்ட் பார்ட் என்றால், பழைய கதையின் தொடர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் இதில், prequel தான் எடுக்கிறார்கள். அதனால் காந்தாரா பார்ட் 2 என்று பெயர் வைக்காமல், சாப்டர் 1 என்று பெயர் வைத்தார்கள்.

படவேலைகள் ஒரு பக்கம் கிடுகிடுவென நடந்துகொண்டிருந்தாலும், பார்ட் 1 விட பயங்கரமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பயங்கரமான மேக்கிங்-ல் படம் உருவாகி வருகிறது.

மறுபக்கம் ரசிகர்களோ, படம் எப்போது வெளியாகும், அட்லீஸ்ட் படலாவது வெளியாகாத என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது தான் ஒரு அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

காந்தாரா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தசராவை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமே தனது x வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Trending News