திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கரண் சினிமாவில் காணாமல் போக காரணம் இதுதானாம்.. வருடங்களுக்கு பிறகு வெளியான தகவல்

எங்க பாட்டன் சொத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கரண். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே கரன் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவிற்கு நுழைந்துள்ளார்.

ஐந்து வயதிலிருந்து அடுத்து வரும் கரண்ட் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் சினிமாவில் தட்டுத்தடுமாறி வந்தார். சினிமாவில் வருவதற்கு முன்பு இவர் மேனேஜராக பணியாற்றியவர். அதன்பிறகு ஒரு நடிகையுடன் பல வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். அதனாலேயே சினிமா மார்க்கெட்டை இழந்து சாதிக்க முடியாமல் போனார் என கூறியுள்ளனர்.

லவ் டுடே, நேருக்கு நேர் மற்றும் காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதன் பிறகு முழுநேர குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல வருடங்களுக்கு ஒரு படம் நடித்து வருகிறார் கரண்.

karan-cinemapettai-01
karan-cinemapettai-01

சிறுவயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்த கரண் தற்போது வரை சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். ஆனால் மற்ற நடிகர்களை போலவே இவருக்கும் உடல் கட்டமைப்பும், அழகும் இருக்கிறது. ஆனால் ஏன் சினிமாவில் நிலைத்து நிற்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

அதற்கு ஒரு சிலர் இவர் சரியான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்காமல் இவருக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்ததால் தான் இன்றுவரை சினிமாவில் இல்லை என கூறி வருகின்றனர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உச்சத்துல சிவா. இப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது.

Trending News