இந்திய சினிமாவில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். சாருக்கான் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு மெகா ஹிட்டுகளை அள்ளித்தந்தவர். ஒரு கட்டத்தில் கவர்ச்சியில் குதித்த கரீனா காடு மேடெல்லாம் கவர்ச்சி மழை பொழிய வைத்தார் என்றால் மிகையாகாது.
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரமான சைப் அலிகானை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயுமானார். திருமணத்திற்கு பிறகும் திரையில் மிரட்டி வந்தாலும் தாய்மைக்கு பிறகு கொஞ்சம் காலம் ஓய்வெடுத்தார்.
![kareena kapoor](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/kareena-kappor.jpg)
இரண்டாவது குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் பிறந்துள்ளதாக கணவர் சைப் அலிகான் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இப்போது அவரின் கர்ப்பகால அனுபவம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
“பிரக்னென்ஸி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகம் மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாய் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புத்தகம் வெளியிட்ட நிறுவனம் மற்றும் கரீனா கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.