ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

குணசேகரன் முகத்திரையை கிழித்தெரியும் கரிகாலன்.. தலையில் இடியை இறக்கிய மங்குனி ஆடிட்டர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை சுவாரசியமாக வருகிறது. இதில் குணசேகரனுக்கு உண்மையிலேயே பக்கவாதம் வந்திருக்கிறதா என்று வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் அதை யாருமே நேரடியாக கேட்க தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். அதிலும் இவர் என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக இவருடைய தம்பி ஞானம் நம்புகிறார்

ஆனால் கரிகாலன் மட்டும் குணசேகரன் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக கண்டுபிடித்து விடுகிறார். அந்த வகையில் இவர் சென்னைக்கு தான் போயிருப்பார், இவருக்கு பக்கவாதம் வரவில்லை என்று குணசேகருடைய முகத்திரையை கிழித்து எடுக்கும் விதமாக சரியான பாயிண்ட்டை வைத்து கேள்வி கேட்கிறார். கரிகாலன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

அடுத்தபடியாக கரிகாலன் கேட்ட கேள்விக்குப் பிறகும் கொஞ்சம் கூட சந்தேகப்படாமல் முட்டாள் பீஸ் மாதிரி ஞானம் பிடித்து வைத்த கொழுக்கட்டையாக அப்படியே இருக்காரு. பிறகு வளவன், கதிருக்கு போன் பண்ணி எல்லாம் நல்லபடியாக போய்கிட்டு இருக்கு. கூடிய சீக்கிரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்க காதில் வரும் என்று கூறுகிறார். இதைக் கேட்ட கதிர் குணசேகரனிடம் எதிர்மறையாக விஷயத்தை சொல்லி விடுகிறார்.

பின்னர் ஜனனி, ரேணுகாவிற்கு இன்னொரு இடத்தில் டான்ஸ் டீச்சருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கி கொடுத்து விடுகிறார். இதைக் கேட்டதும் ரேணுகா ரொம்பவே சந்தோஷத்தில் ஜனனியை கொண்டாட ஆரம்பிக்கிறார். இனி ரேணுகா வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது. இன்னும் மீதம் இருக்கிறது நந்தினி உடைய கேட்டரிங் பிஸ்னஸ்.

Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

அதுவும் கூடிய விரைவில் நந்தினி ஆரம்பித்து விடுவார். அதன் பிறகு இவர்களை நம்பிப் பிழைக்கும் வழியாகத்தான் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் நிலைமை ஆகப்போகிறது. அடுத்தபடியாக பிரேக்கிங் நியூஸ் ஆடிட்டர் குணசேகரனிடம் சொல்வதற்கு வந்திருக்கிறார். இதை கேட்டதும் இன்னும் குணசேகரன் என்ன ட்ராமாவா ஆரம்பிக்கப் போகிறாரோ.

அதாவது இந்த வீட்டில் ஜீவானந்தத்திற்கும் பங்கு இருப்பதால் அது சம்பந்தமாக நோட்டீஸ் தான் அனுப்பப்பட்டு இருக்கும். இதை கேட்டதும் குணசேகரன் தலையில் இடியை விழுந்தது போல் இருக்கப் போகிறது. தற்போது இவருடைய நிலைமை பல் பிடுங்குன பாம்பு போல தான் மாறிக்கொண்டே வருகிறது. ஆனாலும் விடாமல் குணசேகரனை ஒரு வழி பண்ணும் ஜீவானந்தம், இன்னும் அடுத்து என்ன செய்ய காத்துக் கொண்டிருக்கிறாரோ!

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

Trending News