மகிழ் திருமேனி ஒரு கட்டத்தில் உச்சாணி கொம்பில் இருந்தார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கிய காலகட்டத்தில் இவரை அணுகுவது மிகவும் கடினமான ஒன்று. தற்போது அந்த படம் ரிலீசாகி அவருக்கு அவப்பெயரை கொடுத்தது. சரியாக போகாததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் மகிழ்.
விடாமுயற்சி படம் இயக்கும் நேரத்தில் இவரை தேடி பல ஹீரோக்கள் சுற்றி வந்தனர். ஆனால் யாரையும் அவர் பொறுப்பெடுத்தாமல் கண்டு கொள்ளவே இல்லையாம். அதில் ஒருவர் தான் நடிகர் விக்ரம். அடுத்த படம் பண்ணலாம்னு விக்ரமிடமிருந்து மகிழ் திருமேனிக்கு தூது வந்துள்ளது. அப்போதைய நேரத்தில் அதை நிராகரித்து விட்டார் மகிழ்.
ஹீரோக்கள் மட்டுமல்லாது பல தயாரிப்பாளர்களும் மகிழ்ந்திருமேனியை தேடி வந்தனர். ஆனால் அவர்களுக்கும் இவர் எந்த ஒரு பிடியும் கொடுக்கவில்லை. இப்பொழுது விடாமுயற்சி பட தோல்விக்கு பின்னர், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். அவர் தரப்பிலிருந்து பல தயாரிப்பாளர்களை நாடியும் பிரயோஜனம் இல்லை.
மகிழ் திருமேனி இடமிருந்து மீண்டும் விக்ரமுக்கு அழைப்பு வந்திருக்கிறது ஆனால் விக்ரம் இந்த முறை அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். வாழ்க்கை ஒரு வட்டம் இன்று தோற்பவன் நாளை ஜெயிக்கலாம். ஜெயித்தவனும் தோற்கலாம் என்பது போல் கர்மா சுற்றி வருகிறது மகில் திருமேனியை.
இப்பொழுது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை. தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் மகிழ்திருமேனியா என்று தெரிந்து ஓடுகின்றனர். அந்த அளவிற்கு விடாமுயற்சி படம் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பல பிரச்சனைகளைத் தாண்டி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.