தனுஷின் கர்ணன் படத்தை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள கர்ணன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் தயாரிப்பாளரையும் பத்திரிக்கையாளர்களையும் கொண்டாட வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் கர்ணன் படத்தை பார்த்த சினிமா நட்சத்திரங்களும் படத்தை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு கர்ணன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு கூடியிருக்கும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் கர்ணன் படம் தமிழ்நாடு முழுவதும் 11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். கர்ணன் படம் தான் தனுஷின் சினிமா கேரியரில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக மாறியுள்ளது. இவ்வளவு ஏன், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் கூட இவ்வளவு கோடி வசூலை முதல் நாள் எட்டவில்லை என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களுடைய வட்டாரங்களில் விசாரித்த தெரிவித்துள்ளனர். கர்ணன் படம் இனிவரும் நாட்களில் அதிகம் வசூலிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அதற்கு காரணம் முதல் நாள் நூறு சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க அரசாங்கம் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. இதனால் வசூலில் கொஞ்சம் பாதிப்பு இருக்கும் என்றே சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.