தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற கர்ணன் படம் தமிழகமெங்கும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் பக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகியிருந்தது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் சாதிப் பிரச்சினைகளை தூண்டும் வகையில் கர்ணன் திரைப்படம் அமைந்திருப்பதாக பல கருத்துக்கள் வெளியானது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் அமேசான் தளத்தில் கர்ணன் திரைப்படம் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். கர்ணன் திரைப்படம் வெளியான முதல்நாள் மட்டும்தான் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தன. ஏதோ ஒரு வகையில் கர்ணன் திரைப்படம் ரசிகர்களை பாதித்துள்ளது என்பது மட்டும் உறுதி.
இந்நிலையில் மே 14-ஆம் தேதி கர்ணன் படம் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளதாம். கர்ணன் படத்திற்கு ஒடிடி தளத்திலும் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இதற்கு முன்னர் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர் போன்ற படங்களின் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.