தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமான திரைப்படம் தான் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன்.
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியானது.
மேலும் கொரானா சமயத்தில் தடைபட்டிருந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு மொத்தமாக முடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கர்ணன் படத்தின் இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கர்ணன் படத்தை பார்த்து வியந்த விட்டதாகவும், படத்தில் தனுஷ் நடிப்பை பார்த்து பெருமிதபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ணன்- அனைத்தும் கொடுப்பான் எனவும் ஒரு வார்த்தை சேர்த்துள்ளார்.

அதை வைத்து பார்க்கையில் கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். முன்னதாக கர்ணன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னதாக தனுஷ், ஜகமே தந்திரம் படத்தை வெளியிட்டு விடலாம் என முயற்சி செய்து வருகிறாராம்.