வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆபத்துப்பாண்டவனாய் சிவகார்த்திகேயனுக்கு உதவிய சாமி.. 5 வருடமா போராடிய அயலான் ரிலீசுக்கு உதவிய கர்ணன்

Sivakarthikeyan- Ayalaan: சில நடிகர்களின் படங்கள் எப்படி இருந்தாலும் ரசிக்கத் தோன்றும், அவர்களுடைய நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் போய் பாடத்தை பார்ப்போம். இதில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு எப்போதுமே ஒரு வரவேற்பு மக்களிடம் இருக்கும். அப்படித்தான் பொங்கலை ஒட்டி வெளிவந்த அயலான் படமும் மக்களை கவர்ந்திருக்கிறது.

அதனால் தற்போது கிட்டத்தட்ட 59 கோடி வசூலை பெற்று தொடர்ந்து லாபத்தை சம்பாதித்து வருகிறது. ஆனால் இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு முன் கிட்டத்தட்ட ஐந்து வருடமாக போராடி இருக்கிறார். அதாவது கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு பல தடங்கல்களை பார்த்திருக்கிறது. கடைசியில் படத்தை எடுத்து முடித்த பிறகு ரிலீஸ் பண்ணுவதற்கும் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.

அதாவது 27 கோடி கடனை அடைத்த பிறகு தான் அயலான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்று ஒரு பஞ்சாயத்து இவர் மீது வைக்கப்பட்டது. இதை எப்படியாவது சரி செய்தால் மட்டுமே அயலான் படத்தில் வெற்றியை பார்க்க முடியும், தன்னுடைய கேரியரிலும் ஒரு லாபத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சியை எடுக்க ஆரம்பித்தார்.

Also read: வாத்தியை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான், கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல்

அப்பொழுதுதான் இவருக்கு ஆபத்துப்பாண்டவராக ஒருவர் உதவி செய்திருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் இருந்த கஷ்டத்தில் கடவுள் போல் உதவியவர் யார் என்றால் கோல்ட் மைன் தயாரிப்பாளர் மனிஷ். இவர்தான் தமிழ் படங்களை ஹிந்தியில் வெளியிடும் உரிமைகளை வாங்கிக் கொடுப்பவர். அத்துடன் சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் சிவகார்த்திகேயனிடம் ரொம்ப நாட்கள் ஆகவே கூட்டணி வைப்பதற்காக கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இவர் பற்றிய ஞாபகம் அவருக்கு வரவே இல்லை. தற்போது இந்த பண பிரச்சனையில் இருந்து அவர் ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று சிவகார்த்திகேயன் யோசித்து அவரிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு அவர் ஞாபகம் வந்ததும் டக்குனு அவரிடம் டேட் கொடுத்து விட்டார். அத்துடன் சிவகார்த்திகேயன் சம்பளமாக 35 கோடிக்கு டீல் பேசிவிட்டார். அதற்காக அட்வான்ஸ் தொகையாக 20 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். இந்த தொகையை வாங்கிய பின்பு சிவகார்த்திகேயன் அவருக்கு இருந்த 27 கோடி கடனில் 20 கோடியை செட்டில்மெண்ட் பண்ணி இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்து போய்விட்டது.

Also read: தில் ராஜுவால் ஏற்பட்ட பெரிய தலைவலி.. தேவையில்லாத பஞ்சாயத்தில் சிக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன்

Trending News