செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி!

சமீபகாலமாக சன் டிவியின் நிகழ்ச்சிகள் தரம் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் மற்ற சேனல்களில் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மொத்தமாக சன் டிவியை முடக்க மற்ற சேனல்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த சன் டிவி தற்போது சிறந்த நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. மேலும் பார்த்து பார்த்து சலித்து போன ஒரே மாதிரியான கதையில் சீரியல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இதனால் முன்னர் போல் டிஆர்பி இல்லை என்கிறார்கள் சன் வட்டாரங்கள். இருந்தாலும் நம்பர் ஒன் சேனல் நாங்கள் தான் என வெளியில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சேனல்களாக இருப்பது என்னமோ ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தான்.

வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களை மக்கள் ரசிக்கும் படி கலகலப்பாக ஒளிபரப்பி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன. கடைசியாக சன் டிவி நிறுவனத்திடம் இருந்த ஒரே ஒரு பிரம்மாஸ்திரத்தையும் கைப்பற்றி விட்டனர்.

சன் டிவி நிறுவனம் சுமாரான நிகழ்ச்சிகளை கொடுத்தாலும் முன்னணி நடிகர்களின் புதிய படங்களை கைப்பற்றி தன்னுடைய சேனலில் வெளியிடும். மார்க்கெட்டில் பெரிய சேனலாக இருப்பதால் பலரும் சன் டிவியில் படத்தை கொடுக்க ஆர்வம் காட்டுவார்கள்.

karnan-poster
karnan-poster

ஆனால் இந்த முறை சன் டிவிக்கு ஆப்பு வைத்துள்ளது ஜீ தமிழ். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கும் கர்ணன் படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து ஜீதமிழ் வாங்கியுள்ளதாம். இதற்காக சன் டிவி பலத்த போட்டி போட்ட நிலையில் கடைசியாக சில பல கோடிகள் அதிகமாக விட்டுக் கொடுத்து படத்தை கைப்பற்றியதாம் ஜீ தமிழ்.

Trending News