தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கர்ணன் படம் வெளியான மூன்றாவது நாளே தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மிகப்பெரிய வசூல் செய்ய வேண்டிய கர்ணன் திரைப்படம் அதிலிருந்து கொஞ்சம் குறைவாகவே வசூல் செய்தது. அதையும் அடுத்த சில நாட்களிலேயே அமேசான் தளத்திற்கு கொடுத்து சரிகட்டி விட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி.
மேலும் கர்ணன் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பியது.
எதிர்பார்த்ததைப் போலவே தனுஷின் கர்ணன் படம் ஜீ தமிழ் சேனலில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத டிஆர்பி சாதனையை செய்துள்ளது. கர்ணன் படம் சுமார் 9.4 டிஆர்பி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளதாக ஜீதமிழ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.