தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக மாரி செல்வராஜுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற மாரி செல்வராஜ் தற்போது தனுஷுடன் இணைந்து கொடுத்துள்ள கர்ணன் திரைப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கர்ணன் படத்திற்கு பிறகு மினிமம் கியாரண்டி இயக்குனராக மாறியுள்ளார். அந்தவகையில் அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ்.
கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் சரி வெளியான பிறகும் சரி ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை எதிர்கொண்டது. முதலில் கர்ணன் படத்திற்கு கர்ணன் என்ற டைட்டில் வைக்கக்கூடாது எனவும் சர்ச்சைகள் கிளம்பியது.
அதைவிடக் கொடுமை என்னவென்றால் படம் வெளியான இரண்டாவது நாளே 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தனர். இருந்தாலும் வசூலில் ஒன்றும் குறை வைக்கவில்லை கர்ணன்.
இந்நிலையில் கர்ணன் படத்திற்கு முதன் முதலில் என்ன பெயர் வைத்தார்கள் என்பதை படத்தின் கலை இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். முதன்முதலில் கர்ணன் படத்திற்கு பாண்டிய ராஜாக்கள் என்று தான் பெயர் வைத்தார்களாம். கர்ணன் தலைப்புக்கே பல பஞ்சாயத்துகள் வந்த நிலையில் பாண்டிய ராஜாக்கள் என்று தலைப்பு வைத்திருந்தால் கண்டிப்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வந்திருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.