வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கார்த்தியின் சாதனையை உடைத்த முத்தையா.. வாய்ப்பு கொடுப்பதற்கு இதுதான் காரணமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திக் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து கார்த்தி பல வித்தியாசமான கதை களத்தில் உருவாகி உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கார்த்தி எப்போதுமே கிராமத்து கதைகளில் மட்டுமே அதிக வெற்றிப் படங்களை கொடுத்தார். அதனால் கிராமத்து நாயகன் என கார்த்திக்கை அழைத்து வந்தனர். அதன்பிறகுதான் பையா படத்தில் நகரத்து பயனாக கலக்கினார். அதன் பிறகு இவருக்கு அனைத்து கதாபாத்திரம் பொருந்துவதாக பலரும் கூறி வந்தனர்.

என்னதான் கார்த்திக் அனைத்து விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது கிராமத்துக் கதைகள் மட்டுமே தான் அதற்கு காரணம் கிராமத்து கதையில் கச்சிதமாக கார்த்தி பொருந்துவார் என்பதுதான். கொம்பன் படத்தின் மூலம் முத்தையா உடன் கூட்டணி அமைத்த கார்த்திக் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

muthaiah
muthaiah

இதுவரை தமிழ் சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு படத்தில் நடித்த இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்காமல் இருந்த கார்த்திக் தற்போது முதல் முறையாக முத்தையா உடன் மீண்டும் மற்றொரு படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கார்த்திக் 20 படங்கள் வரைக்கும் வைத்துள்ள சாதனையை தற்போது முத்தையா உடைத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதுவரைக்கும் ஒரு படத்தில் பணியாற்றிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்காத கார்த்திக்கு முத்தையாவுக்கு மட்டும் ஏன் மீண்டும் இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அதற்கு காரணம் கார்த்தி கிராமத்து கதைக்கு கச்சிதமாக பொருந்துவார் மேலும் முத்தையா கிராமத்து கதைகளில் படங்களை எடுப்பதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால் இருவருமே ஒரு கிராமத்து கதையில் இணையும் போது அப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதால்தான் கார்த்திக் 20 படங்கள் வரைக்கும் வைத்திருந்த கொள்கையை உடைத்துள்ளார் என கூறியுள்ளனர்.

Trending News