Home Tamil Movie News மேடையில் தேவையில்லாம வாய்விட்ட மெய்யழகன்.. பவன் கல்யாண் விட்ட டோஸ், சரண்டர் ஆன கார்த்தி!

மேடையில் தேவையில்லாம வாய்விட்ட மெய்யழகன்.. பவன் கல்யாண் விட்ட டோஸ், சரண்டர் ஆன கார்த்தி!

karthik-pawan-kalyan
karthik-pawan-kalyan

இந்தியாவின் மிகப் பிரலமான கோயில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலையில் அமைந்திருக்கும் ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இக்கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம் என்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாங்கி சாப்பிடுவர். இந்த நிலையில், ஆந்திராவில் கடந்த ஆட்சியில் அதாவது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியின்போது, லட்டு பிரசாத்த்தில் நெய்க்குப் பதிலாக மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்ட்தாக சர்ச்சையை தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் அரசு எழுப்பியுள்ளது.

இண்ட நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்ட்தால் திருப்பதி கோயில் சமையல் அறையின் புனிதம் கெட்ட்தாகவும் அங்குள்ள புரோகிதர்களும், இந்து அமைப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இக்குற்றச்சாட்டை முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியின் நடந்த தவற்றிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரும் வகையிலும் அம்மா நில துணைமுதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரத்தை நடத்தி வருகிறார்.

இந்த தவற்றை சீர்செய்யும் வகையிலும் அதன் புனித்துவத்தை பராமரிக்கும் வகையிலும் மகாசாந்தி யாகம் கோயிலிலும் அதன் சமையலறையிலும் நடத்தப்பட்டது. இவ்விவகாரம் பற்றி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் மெய்யழகன் பட்த்தின் புரமோசன் நிகழ்ச்சியின்போது, சிறுத்தை பட்த்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சி பற்றி கேள்வி எழுப்பட்ட்து. அதற்குப் அவர்,”சென்சிட்டிவான விவகாரம் என்றும், லட்டே தனக்கு வேண்டாம்” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”லட்டை வைத்து காமெடி செய்து வருகிறார்கள்… திரைப்பட நிகழ்ச்சியில் கூட லட்டு பற்றி பேசியிருந்தனர். இனி அப்படி பேசாதீர்கள்… எப்போது அப்படி பேச வேண்டாம்…ஒரு நடிகராக உங்கள் மீது மதிப்பு செலுத்துகிறேன்…ஆனால் சனாதன தர்மம் என்று வரும்போது, ஒருமுறை பேசுவதற்கு முன் நூறு முறை யோசியுங்கள்” என்று பேசியிருந்தார். இது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தன் பேச்சிற்கு அதிருப்தி ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் அதிருப்தி தெரிவித்துள்ளதால் இதற்கு கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”பவன் கல்யாண் ஐயா உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் கூடிய எதிர்பாராத தவறான புரிதலுக்கான நான் மன்னிப்புக் கோருகிறேன். வெங்கடேசப் பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், என எப்போதும் மரபுகளை அன்புடன் நடத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை தன் பாணியில் கலாய்த்து விட்ட ப்ளூ சட்டை மாறன்,

Blue Sattai Maran Twit