Meiyazhagan Photos: 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் மெய்யழகன் படம் உருவாகி இருக்கிறது. இதில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களமாக உருவாகி இருக்கிறது. கார்த்தியை பொறுத்தவரையில் கிராமத்து கதாபாத்திரங்கள் தான் அவருக்கு பக்காவாக பொருந்துகிறது.

அதேசமயம் அது போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் மீண்டும் கிராமத்தானாக களம் இறங்கி இருக்கும் அவர் இதன் மூலம் ஒரு தரமான வெற்றியை பதிவு செய்ய இருக்கிறார்.
கார்த்தியுடன் கிராமத்து கெட்டப்பில் அரவிந்த்சாமி
கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான ஜப்பான் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதை அடுத்து சிறு இடைவேளைக்குப் பிறகு வெளிவரும் இப்படம் இப்போதே எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.

அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தின் ஸ்பெஷல் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதில் கார்த்தி காளை மாட்டுடன் இருக்கும் போட்டோ ரசிக்கும் வகையில் உள்ளது. மேலும் அவருக்கு போட்டியாக அரவிந்த் சாமியின் கலக்கல் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ஸ்டைலான நடிகராக இருக்கும் இவர் கிராமத்து கெட்டத்திலும் அம்சமாக இருக்கிறார். இப்படியாக மண்வாசனையோடு வெளிவந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
மெய்யழகன் படத்தின் புகைப்படங்கள்
- செப்டம்பர் 27 குறி வைத்து வெளியாகும் 4 படங்கள்
- கார்த்தி படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி மரணம்
- மார்க்கெட் படுத்தாலும் கார்த்தியின் லயன் அப்பில் இருக்கும் 3 படங்கள்