கார்த்தி தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஹாட்ரிக் வெற்றி பெற்ற கார்த்தி அடுத்ததாக ஜப்பான் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் பெற்ற ராஜுமுருகன் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
Also Read : தொடர் வெற்றியால் இயக்குனரை டீலில் விட்ட கார்த்தி.. ஒரு வருடமாக காத்திருந்த பரிதாபம்
இந்நிலையில் ஜப்பான் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் ஒரு சோபாவில் கையில் சரக்குடன் மது அருந்திவிட்டு உச்சகட்ட போதையுடன் படுத்து உள்ளார் கார்த்தி. கீழே ஒரு பெண் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
மேலே உள்ள போஸ்டரில் தங்க நிற உடையில் கழுத்து முழுக்க தங்கம் கையில் உலோக உருண்டை என துப்பாக்கியுடன் நிற்கிறார். ஆகையால் பெண், போதை என ஒரு உலகை சுற்றும் வாலிபனாக இந்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்திக்கு ஜப்பான் படமும் முற்றிலும் வித்தியாசமான கதை களத்துடன் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த போஸ்டரை பார்த்த கார்த்தி ரசிகர்கள் இதை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
Also Read : அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான கார்த்தி.. எம்ஜிஆராக எடுக்கும் புது அவதாரம்