வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கார்த்தி

கார்த்தி வாரிசு நடிகராக அறிமுகம் ஆனாலும் சரியான படங்களின் தேர்வு மூலம் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். ஒரு சில நடிகர்களுக்கு முதல் படம் வெற்றிப் படமாக அமைவது அபூர்வம் தான். ஆனால் அதுவும் பிளாக்பஸ்டர் படமாக மாறுவது எவ்வளவு பெரிய விஷயம். அதை அசால்ட்டாக செய்தவர்தான் கார்த்திக்.

கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்துவிட்டது.

sultan-cinemapettai
sultan-cinemapettai

சமீபத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் கடைசியாக வெளியான சில படங்களில் தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சிகளில் அதிகமாக நடித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

vijay-smoking-cinemapettai
vijay-smoking-cinemapettai

பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என இயக்குனர்களுக்கு கட்டளை போட்டுள்ளாராம்.

karthi-cinemapettai-01
karthi-cinemapettai-01

Trending News