வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி.. பெரும் பிரச்சனையை கிளப்பிய நெட் பிளிக்ஸ்

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய் உடன் எந்த தைரியத்தில் கார்த்தி திரையரங்கில் மோதுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இதைப் பற்றிய பேச்சு தான் இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல இவர்களுக்கிடையே நெட் பிளிக்ஸ் நிறுவனத்தை மறந்து விட்டதால் இப்போது பெரும் பிரச்சனையை கிளப்புகின்றனர்.  வாரிசு படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் மூக்கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ம் தேதியான ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது. அதே நாள்தான் கார்த்தியின் ஜப்பான் படமும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்து கலக்கிய கார்த்தி தன்னுடைய அடுத்த படமான ஜப்பான் திரைப்படத்தை தீபாவளிக்கு தான் ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: அரசியல் பிரவேசத்தை வலுவாக பதித்த விஜய்.. ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ஒதுக்கிய 2 கோடி

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் அது தினத்தில் ஜப்பானும் ரிலீஸ் ஆகிறது. அவ்வளவு தைரியமாக ஜப்பான் படம் தளபதியுடன் மோத ரெடியாகிவிட்டன. ஆனால் லியோ மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம்தான் மற்ற நிறுவனங்களின் மத்தியில் போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்றியது.

அதிலும் லியோ படத்தை 120 கோடி கொடுத்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியது. அதேபோலத்தான் ஜப்பான் படத்தையும் பல கோடிகள் செலவு செய்துதால் கைப்பற்றியது. இந்த இரண்டு படங்களும் வேறு வேறு தினத்தில் தான் வெளியாகும், அதன் பிறகு ஒரு மாதம் கழித்து நம்மளுடைய ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து நல்ல லாபம் பார்த்து விடலாம் என்ற பேராசையில் நெட் பிளிக்ஸ் இருந்தது.

Also Read: விஜய் மார்க்கெட்டை காலி செய்ய நினைக்கும் சைக்கோ இயக்குனர்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் தளபதி

ஆனால் லியோ மற்றும் ஜப்பான் இரண்டு படங்களும் திரையரங்கில் மோதிக் கொள்ள நினைத்தார்களே தவிர, அதன் பின் விளைவு நெட் பிளிக்ஸ்சை பாதிக்கும் என கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதால் நெட் பிளிக்ஸ்-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெட் பிளிக்ஸ் ஓடிடி-யில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்ய முடியும். இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் அவர்களால் ரிலீஸ் செய்ய முடியாது. பல கோடி கொட்டிக் கொடுத்த நாங்கள் என்ன முட்டாள்களா! எப்படி இரண்டு படத்திலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்தீர்கள். இப்படி ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று ஜப்பான் படத்திடம் பிரச்சினை செய்து வருகிறது நெட் பிளிக்ஸ் நிறுவனம்.

லியோ படம் படப்பிடிப்பிற்கு முன்பே வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில் ஆயுத பூஜை அன்று படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டனர். அப்படி இருக்கும்போது கார்த்தியின் ஜப்பான் படம் தான் தேவை இல்லாமல் நெட் பிளிக்ஸ்-க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது. இதனால் இப்போது பெரிய பிரச்சனையை செய்து கொண்டிருக்கும் நெட் பிளிக்ஸ் உடன் ஜப்பான் பட குழு சமரசம் பேசிய ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சஞ்சய் தத் செய்வதை பார்த்து வியந்து போன விஜய்.. ஒரு பெரிய மனுஷன் இப்படியா பண்ணுவாரு.!

Trending News