வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

17 வருடம் செய்யாத ஒன்றை செய்த கார்த்தி.. அண்ணனுக்காக விட்டுக்கொடுத்த தம்பி

சூர்யாவின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான திரைப்படம் தான் கங்குவா. சிவாவின் இயக்கத்தில் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவான இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான திரைப்படமாகும்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷன்களை பிரம்மாண்டமாக படக்குழு செய்து வந்துள்ளது. இந்த நிலையில் அண்ணன் சூர்யாக்காக நடிகர் கார்த்தி ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதை அவர் திரைப்பயணத்தில் இதுவரை செய்ததே இல்லையாம்.

விட்டுக்கொடுத்த கார்த்தி

சமீபத்தில் கங்குவா படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே எதிர்பார்த்த மாதிரியே, படத்தில் நடிகர் கார்த்தியின் கேமியோ இடம் பெற்றுள்ளது. ட்ரைலரிலும் நடிகர் கார்த்தியின் காட்சிகள் வந்தது.

இதில் கார்த்தி முதல் முறையாக புகைப்பிடிப்பதுபோல நடித்திருக்கிறார். கார்த்தி தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை எந்த படத்திலும் புகை பிடிப்பது போல நடித்ததே இல்லை. அதை அவர் கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணனுக்காக, தனது கொள்கையை கார்த்தி விட்டுக்கொடுத்துள்ளார். மேலும் அவர் இப்படி செய்யவேண்டும் என்றால், அது சூர்யா career-இல் எவ்வளவு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

Trending News