Actor Karthi: சினிமாவில் என்னதான் முன்னணி நடிகர்களாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும், படங்களில் நடிக்கும் சின்ன சின்ன ஆர்டிஸ்ட்டுகளை யாரும் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. ஆனாலும் அவர்களுடைய முழு பங்களிப்பையும் சினிமாவிற்கு அர்ப்பணித்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் இக்கட்டான சூழ்நிலையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் ஓடி வந்து உதவி செய்வது நடிகர் சங்க தயாரிப்பாளர். சங்கத்தின் சார்பாக உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார்கள்.
Also read: சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார் விஜய் ஹீரோயின்.. திடீரென்று காணாமல் போனவரை தேடிப் பிடித்த SK
அந்த வகையில் சமீபத்தில் அங்காடி தெரு நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் இறந்த பொழுது நேரில் சென்று சங்கத்தின் சார்பாக நடிகர் கார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்தி வந்தார். அத்துடன் மாலை அணிவித்து இவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, ரூபாய் 10000 ரொக்க தொகையும் சங்கத்தின் சார்பாக கொடுத்து வந்திருக்கிறார்.
ஆனாலும் இதற்கு முன் நடிகை சிந்து நோயால் பாதிக்கப்பட்ட போது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக இவர்கள் எந்த உதவியையும் பப்ளிசிட்டி பண்ண மாட்டார்கள்.
Also read: கார்த்தியின் கைவசம் இருக்கும் 5 மெகா பட்ஜெட் படங்கள்.. அண்ணனை மிஞ்சிய தம்பி
அதனால் இவர்கள் செய்த இந்த உதவி பெரும்பாலான பலருக்கும் தெரியாமலே போய்விட்டது. அத்துடன் யாருக்காவது ஏதாவது ஒரு உதவி என்றால் அதற்கு முதல் நாளாக போய் உதவி செய்வது சூர்யாவின் பழக்கம். இதையே தற்போது இவருடைய தம்பியும் நடிகர் கார்த்தியும் ஃபாலோ பண்ணி வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் சார்பாக பல உதவிகளை செய்து வரும் நிர்வாகிகள் அனைவரும் சினிமாவில் இருக்கும் அனைத்து ஆர்டிஸ்டர்களுக்கும் தக்க தேவையான உதவியை செய்து வருகிறார்கள்.
Also read: கணவன் இறப்பு, நடுத்தெருவுக்கு வந்த காமெடி நடிகரின் குடும்பம்.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன், சூரி