வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முரட்டுத்தனமாக மோதிய டெல்லி- ரோலக்ஸ்.. கங்குவா படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ

Kanguvaa: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்கு வா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. சூர்யா கிட்டத்தட்ட இந்த படத்திற்காக தன்னுடைய இரண்டு வருடங்களை செலவு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு பிரமோஷன் விழாக்களிலும் அவர் பேசியதில் இருந்தே இந்த படத்திற்காக எந்த அளவுக்கு மெனக்கெட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் தொடர்ந்து ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்றும் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்தார்.

அதன் பின்னர் தியேட்டர் ரிலீஸ் என்று பார்த்தால் விக்ரம் படத்தில் இவர் நடித்த கேமியோ ரோல்தான். இது சூர்யா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து வந்தது. இந்த நிலையில் தான் நவம்பர் 14ஆம் தேதி இன்றைய தினம் சூர்யா ரசிகர்களுக்கு திருவிழா போல் மாறி இருக்கிறது.

படத்தில் பிரமோஷன் விழாக்களில் பட குழு பேசியது போல் படம் பெரிய அளவில் பாசிட்டி விமர்சனங்களை பெறவில்லை. இதுவரைக்கும் வெளியான கருத்துக்கள் கலவையான விமர்சனங்களை தான் கொடுத்து இருக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்ன மாதிரி 2000 கோடி வசூல் செய்யுமா என்பதெல்லாம் கொஞ்சம் சந்தேகம் தான். கங்குவா படம் படப்பிடிப்பில் இருந்த போது கார்த்தி இந்த படத்தில் நடிக்கிறார் என பெரிய அளவில் பேசப்பட்டது.

ப்ரோமோஷன் விழாக்களில் இதை பற்றி கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள் பட குழுவை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இன்று படம் பார்த்தவர்கள் சிலர் கங்குவா படத்தில் கார்த்தியின் கெட்டப் என்று சொல்லி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

கங்குவா படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ

Karthi
Karthi

இதில் கார்த்தி ரொம்பவே முரட்டுத்தனமாக இருக்கிறார். சொல்லப்போனால் இந்த மேக்கப்பில் பாகுபலியில் வரும் காலகேயர்கள் தோற்றுவிடுவார்கள் போல. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு இடையே சண்டைக்காட்சி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் முழு விமர்சனம் வந்தால் தான் இது பற்றி தெரியும்.

Trending News