கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடி வருகிறது. அதிலும் மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று காவியமாக உருவான பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக அவர் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக பிரம்மாண்ட கூட்டணியுடன் இணையவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் இவர் நடித்துள்ள ஜப்பான் தீபாவளி ரிலீசில் இருந்து விலகி இருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டரே பலரையும் வியக்கச் செய்தது. அதைத்தொடர்ந்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிப்பு வந்த நிலையில் தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களும் வெளிவருவதால் இப்படம் முன்கூட்டியே ரிலீசாக உள்ளது.
Also read: தமிழில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் 5 நடிகர்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்
ஆனால் இதில் தான் விஷயமே இருக்கிறது. என்னவென்றால் ஜப்பான் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கிறதாம். ஏற்கனவே அந்த தேதியில் விஜய்யின் லியோ வெளிவரும் என்ற அறிவிப்பு பட பூஜையின் போது வெளியிடப்பட்டிருந்தது. அதனாலேயே அந்த தேதியில் வேறு எந்த படங்களும் போட்டிக்கு வராமல் இருந்தது.
தற்போது திடீரென கார்த்தி போட்டிக்கு வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி பூனைக்கு பயந்து புலியிடம் சிக்கிக்கொண்டார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால் பட குழு கதையின் மீது இருக்கும் நம்பிக்கையால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். இதற்கு முன்பாகவே விஜய்யின் பிகில் படம் ரிலீஸ் ஆன தேதியில் கார்த்தியின் கைதி படமும் வெளிவந்தது.
Also read: சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விடுங்க.. தயாரிப்பாளர் மீது செம காண்டில் விஜய்
அப்போது லோகேஷ் புதுமுக இயக்குனராக இருந்தாலும் கதையின் காரணமாகவே கைதி படம் அவருக்கு வெற்றியாக அமைந்தது. அந்த நம்பிக்கையில் தான் இப்போது கார்த்தி, விஜய் மற்றும் லோகேஷை எதிர்க்க துணிந்திருக்கிறார். மேலும் எங்களுக்கு 100 முதல் 150 தியேட்டர்கள் வரை கிடைத்தால் போதும். எங்கள் ரசிகர்கள் கட்டாயம் படத்தை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் படக்குழு இருக்கிறதாம்.
அந்த வகையில் சிங்கத்தை எதிர்க்க தைரியமாக முன் வரும் இந்த சிறுத்தை போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ராஜுமுருகனுக்கும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் இந்த மோதல், சபாஷ் சரியான போட்டி என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also read: லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்படும் 5 படங்கள்.. 3 கமல் படங்களை குறி வைத்து போடும் திட்டம்