புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கார்த்தியை இயக்கப்போகும் வெற்றி இயக்குனர்.. மக்களை மிரள வைக்கப் போகும் வில்லன்

கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் ரசிகர்களை கவரும் வகையில் பல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவரின் நடிப்பில் இந்த வருடம் வெளியாக இருக்கும் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் கார்த்தியின் 24 வது திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கார்த்தி ஜோக்கர், குக்கூ போன்ற சிறந்த படைப்புகளை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் தான் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். ஒரு பத்திரிகையாளராக, எழுத்தாளராக இருக்கும் இவரின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை தட்டிச்சென்றது.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நபராக இருக்கிறார். தற்போது தளபதி 66 திரைப்படத்திற்கு வசனம் எழுதி வரும் இவர், ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார்.

நீண்ட நாட்களாக ஒரு கதையை தயார் செய்து கொண்டிருந்த ராஜுமுருகன் தற்போது கார்த்தியை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பாக நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபகாலமாக இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்த விஜய் சேதுபதி இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்தார் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் கார்த்தி அந்த படத்தை முடித்துக் கொண்டு விரைவில் ராஜுமுருகனுடன் இணைய உள்ளார்.

Trending News