வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கார்த்தியை புகழ்ந்து தள்ளிய நெப்போலியன்.. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுது

இவரைப் போல் ஒரு நடிகரை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என நடிகர் கார்த்தியை பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் 80 கால நடிகர். 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன்.

கதாநாயகனாக மட்டுமில்லாமல், வில்லன் துணை நடிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்துள்ளார். மேலும் இவர் நடித்ததில் எஜமான், எட்டுப்பட்டி ராசா, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிதளவு பேசப்பட்ட திரைப்படங்களாகும். இதனிடையே பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில், கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில், கார்த்தியின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தையடுத்து ,அனைவரும் கிளம்பி இருந்தனர். அச்சமயத்தில் தன் அறைக்குள் வந்து, என் படத்தில் நீங்கள் நடித்ததற்கு நன்றி என தெரிவித்து சென்றாராம். இது குறித்து பேசிய நெப்போலியன் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி தன்னிடம் வந்து நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இவ்வளவு பண்பாக இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், எனது மார்க்கெட் தமிழ் சினிமாவில் தற்போது இல்லாதபோது எந்த ஒரு நடிகரும் இதுபோன்று என்னிடம் நடந்துகொண்டது இல்லை என நெப்போலியன் பேசியுள்ளார். மேலும் நான் பார்த்ததிலேயே கார்த்தி போல் ஒரு அருமையான நடிகரை தான் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார். அவங்க அப்பா குணம் அப்படியே இருக்கு.

பொதுவாகவே நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படங்கள் சைலண்டாக வெற்றியடையும். அதேபோல எந்த ஒரு கிசுகிசுவிலும், தேவையில்லாத பிரச்சினைகளிலும் சிக்காமல் அவர் வேலையை செய்து வருவதால் பலருக்கும் அவரை பிடிக்கும். இதனிடையே தற்போது பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல நடிகரான நெப்போலியன், கார்த்தியை புகழ்ந்து பேசியது, கார்த்தியின் மதிப்பு தமிழ் சினிமாவில் மேலும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் நெப்போலியன் இணைந்து நடித்திருந்தார். அப்போது விஜய்யை தனக்கு பிடிக்காது என்பதை நேரடியாகவே ஒரு முறை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியை பற்றி நெகிழ்ச்சியுடன் நெப்போலியன் பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News