ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கார்த்திக்கு கைவசம் உள்ள 7 படங்கள்.. ரோலக்சை ஓவர் டேக் செய்யும் டில்லி

Karthi Line Up Movies: நிலையான வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், ஒரு படம் வெற்றி அடைந்தால் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வியடையும் அளவிற்கு தான் கார்த்தி-யின் படங்கள் இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக கார்த்தியின் 25 படமாக வெளிவந்த ஜப்பான் படுதோல்வி அடைந்து ரசிகர்களிடம் மொக்கையான விமர்சனங்களை பெற்றது. பொதுவாக வெற்றி தோல்வி என்பது ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கும்.

அதனால் தற்போது தோல்வி அடைந்ததை நினைத்து அடுத்ததாக எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கார்த்தியின் நிலைமை இருக்கிறது. அந்த வகையில் இவருடைய 26 ஆவது படமான “வா வாத்தியாரே” என்ற படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அவருடைய 27 வது படத்தை நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் கதையின் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கதை இருக்க வேண்டும் என்பதற்காக இவருடன் கார்த்தி கூட்டணி வைக்கப் போகிறார். அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதை உருவாகி வரப்போகிறது.

Also read: அசுரத்தனமான கொலைகாரனுக்கு கால் சீட் கொடுத்த கார்த்தி.. வெற்றிக்காக போராடும் இயக்குனர்

இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி ஒரு தரமான சம்பவத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் கூட்டணி தற்போது வலுவாக இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஒரு படம் உருவாகப் போகிறது. அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் மறக்க முடியாத ஒரு படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று.

இந்த படத்தில் கார்த்தியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்டாக வெற்றி பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் எச் வினோத் மற்றும் கார்த்திக் கூட்டணியில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் தயாராக போகிறது. அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் லோகேஷ் கூட்டணியில் டில்லி மறுபடியும் களமிறங்க போகிறார்.

லோகேஷ் எடுத்த படத்திலேயே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சம்பவத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது கைதி தான். அந்த வகையில் ரோலக்ஸ் கேரக்டரையே ஓவர் செய்யும் அளவிற்கு கைதியின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு உருவாகப் போகிறது. இப்படி வெற்றி இயக்குனர்களை தன்வசம் வைத்துக்கொண்டு கார்த்தி ஒவ்வொரு படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Also read: நடிகர் சங்கத்திற்காக ஆரம்பிச்சு, நாசமா போன படம்.. வெட்டியா சீன் காட்டிட்டு இருக்கும் விஷால், கார்த்தி

Trending News