வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டில்லி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு.. அடுத்த கட்ட சாதனைக்கு தயாராகும் கார்த்தி

கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற பல படங்களில் பிஸியாக இருக்கிறார். அதில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்தியுடன் இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்போது வரை கார்த்தி நடித்த அந்த டில்லி கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படத்திலும் அந்த கேரக்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது பல கோடி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

மேலும் அந்த படத்தின் இறுதியில் கைதி மற்றும் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாவதற்கான ஒரு லீடும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் விரைவில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக கைதி 2 திரைப்படத்தை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாவதற்கும் அதிக சாத்தியங்கள் இருக்கின்றது. அந்த வகையில் கார்த்தி அடுத்தகட்ட சாதனைக்கு தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News