செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லோகேஷ் கனகராஜ்க்கு போட்டியாக வரும் இயக்குனர்.. அதே ஐடியாவை கையிலெடுக்கும் முரட்டு நடிகர்

கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் முதல் முறையாக வெள்ளித்திரையில் கால்பதிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் விருமன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இதைத்தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சர்தார் படத்தை தீபாவளி வெளியீட்டுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது கார்த்தியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற டாணாகாரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயுள்ளார்.

தமிழ் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதாவது விசாரணை, வடச்சென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்களில் வெற்றி மாறனுடன் தமிழ் பணியாற்றியிருந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் நடித்திருந்தார்.

ஜெய் பீம் படம் மூலம் மக்கள் மத்தியில் தமிழ் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் கார்த்தி, தமிழ் இணையும் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் டாணாகாரன் படத்தைவிட 4 மடங்கு பட்ஜெட் அதிகமாம். அதாவது கிட்டதட்ட 40 கோடி பட்ஜெட் கார்த்தி மற்றும் தமிழ் கூட்டணியில் உருவாகயுள்ளது.

மேலும் இப்படமும் சென்டிமென்ட் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும். மேலும் இதுபோன்ற கார்த்தி தொடர்ந்து வித்தியாசம் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார்.

Trending News