வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

5 வருடத்திற்கு பிறகு உருவாகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் பட இரண்டாம் பாகம்.. அது முரட்டு படமாச்சே!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகள் அதிகமாக நடந்து வருகின்றன. அப்படி இரண்டாம் பாகமாக வெளியான பல படங்கள் தோல்வியைதான் சந்தித்தது.

இருந்தாலும் என்ன தைரியத்தில் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. கூடவே தல அஜித் நடிப்பில் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி படுதோல்வியை சந்தித்ததெல்லாம் கண்முன்னாடி வர வேண்டாமா.

மிகப் பெரிய நடிகருக்கே அந்த நிலைமை என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும். இருந்தாலும் அத்திப் பூத்தாற் போல் ஆங்காங்கே ஒருசில இரண்டாம் பாகம் படங்கள் வெற்றியை பெற்றுள்ள தைரியத்தில் தற்போது கார்த்தியும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

2015ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கொம்பன். அதற்கு முன் சில சறுக்கல்களை சந்தித்த கார்த்திக்கு கொம்பன் படம் கம்பேக் படமாக அமைந்தது.

மேற்கொண்டு படத்தில் ஜிவி பிரகாஷின் இசை ரசிக்கும்படி அமைந்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்நிலையில் சமீபத்தில் கார்த்தியை சந்தித்து முத்தையா கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை கூறியதாக தெரிகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக இருக்கும் கார்த்திக்கு அடுத்ததாக இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

komban2-cinemapettai
komban2-cinemapettai

அதனைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் கொம்பன் 2 படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இந்த இரண்டு படங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொம்பன் படம் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம் என்பதை ரசிகர்களில் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Trending News