வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தனுஷுக்கு Tough கொடுக்கும் கார்த்தி.. Line Up-ல் இத்தனை படங்களா?

நடிகர் கார்த்தி தொடந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஆண்களுக்கு மிக அழகாக connect ஆனது. இருப்பினும், படத்தின் Duration-னை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கார்த்தி சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார். சமீபத்தில், கங்குவா படத்தில் அண்ணனுக்கு வில்லனாக என்ட்ரி கொடுத்து மிரட்டி இருப்பார். மேலும் அவருக்கே உரித்தான வந்தியத்தேவன் play boy-ஆக இவர் வரும்போது எல்லாம் தியேட்டரே சிரித்தது.

தனுஷுக்கு Tough கொடுக்கும் கார்த்தி..

இப்படி இருக்க இவர் line up-ல் இருக்கும் படங்களை பார்த்தால்.. இவர் அண்ணன் சூர்யாவுக்கும் தனுஷுக்கும் பயங்கரமாக tough கொடுக்கிறாரே என்று தான் தோன்றுகிறது. அப்படி கார்த்தி லைன் அப்பில் முதலாவதாக இருக்கும் படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

அடுத்ததாக பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2. அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக, தமிழ் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத karthi29 படம் உள்ளது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் உள்ளது. அடுத்தது, சிவா இயக்கத்தை கங்குவா 2 படம் உள்ளது.

அதற்க்கு அடுத்ததாக பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படமும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் தீரன் 2 மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

- Advertisement -

Trending News