திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சுல்தான் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள்.. மொக்கை என்று சொன்னவங்களுக்கு கார்த்தியின் பதில் இதுதான்

கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் சுல்தான். வசூல் ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சக ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மாஸ் கமர்சியல் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது. இதுதான் சினிமாவின் அடிப்படை. ஆனால் சமீப காலமாக விமர்சனம் என்ற பெயரில் பலரும் மாஸ் கமர்ஷியல் படங்களுக்கும் எதார்த்தமான படங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலரையும் புண்படுத்தி வருகின்றனர்.

மாஸ் படங்களிலும் எதார்த்தமான நடிப்பு வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது எல்லாமே மிகப் பெரிய படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் இலைமறை காயாக சொல்ல வேண்டிய விஷயங்களை ஓப்பனாக சொல்லி படத்திற்கு ஆப்பு வைத்து விடுகின்றனர்.

ஆனால் சுல்தான் படம் கமர்சியல் படமாக இருந்தாலும் சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளது தான் தயாரிப்பாளர் இந்தப் படத்தில் செய்த ஒரே நல்ல விஷயம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சம்மர் ரிலீஸ் என்பதால் குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே சுல்தான் படம் நினைத்ததை விட அதிகமாகவே வசூல் செய்து கொண்டிருக்கிறதாம். இந்நிலையில் சுல்தான் படத்தின் கமர்ஷியல் வெற்றியை படக்குழுவினர் பத்திரிகையாளர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

அப்போது கார்த்தி நெகடிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் எனவும், எல்லாரையும் திருப்திபடுத்துற மாதிரி படம் யாராலும் எடுக்க முடியாது என்பதையும் கூறி நெகட்டிவ் விமர்சனம் பேசுபவர்களுக்கு சம்பட்டி அடி கொடுத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சுல்தான் படம் செம வசூலை அள்ளிவருகிறது என்பதும் கூடுதல் தகவல்.

karthi-sulthan
karthi-sulthan

Trending News