சினிமாவை பொறுத்தவரை காதல் கிசுகிசுக்கள் ஒன்றும் புதியதல்ல. ஒரு சில நடிகர் நடிகைகள் தொடர்ந்து ஓரிரு படங்களில் நடிக்கும்போது தானாகவே காதல் மலர்வது இயற்கையான ஒன்று தான்.
அப்படிப்பட்ட காதல் கதை நடிகர் கார்த்திக் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடி உள்ளதாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளது சூர்யா குடும்பத்தில் சில சில சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிவகுமாரின் மகன்களான கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருகின்றனர். இதில் சூர்யா உடன் நடித்த ஜோதிகாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதுவே சிவகுமாருக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்ததாம். அந்த நேரத்தில்தான் கார்த்தியுடன் தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டார் தமன்னா. இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
![karthi-tamannah-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/karthi-tamannah-cinemapettai.jpg)
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருவருக்கும் ரொமான்ஸ் நன்றாக இருப்பதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானதாம். மேலும் கார்த்திக்கும் தமன்னாவை திருமணம் செய்வதில் ஆர்வமாக இருந்தாராம்.
இதை கவனித்த சிவகுமார் உடனடியாக கார்த்திக்கை அழைத்து, உங்க அண்ணன் தான் என் பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் நீயாவது நம் சாதி சணத்தில் பெண் எடுத்து நல்ல முறையாக இருப்பாய் என்று பார்த்தால் நீயும் இப்படி செய்கிறாயே, இதை இத்தோடு விட்டுவிடு என எச்சரித்தாராம். அதன் பிறகுதான் அவசர அவசரமாக கார்த்திக்கு திருமணம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார் பயில்வான்.