வாரிசு நடிகர்களாக சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களில் சூர்யாவின் மார்க்கெட்டை விட கார்த்தியின் மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது.
அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யாவின் நிலை என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பெரிய அளவு வெற்றி படங்கள் இல்லாமல் தடுமாறி விழுந்தார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சூர்யாவின் மார்க்கெட்டை சரித்துள்ளது.
குறிப்பாக தெலுங்கில் கொடிகட்டி பறந்த சூர்யாவின் மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சில வருட இடைவெளியில் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் தெலுங்கு சினிமாவில் டாப் டக்கர் ஆக இருந்துள்ளது.
அந்த வகையில் கடைசியாக வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவில் பட்டையைக் கிளப்பி உள்ளது. இதனால் அடுத்ததாக கார்த்திக் நடித்த சுல்தான் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
தற்போது சுல்தான் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் சுமார் 7.5 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாம். மேலும் சுல்தான் படம் 20 முதல் 25 கோடி வரை வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான் படத்தின் தெலுங்கு உரிமையை வாரங்கல் ஸ்ரீனு என்பவர் வாங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு தெலுங்கில் இப்போதே இரட்டிப்பாகியுள்ளது. சுல்தான் படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.