மீண்டும் கேமியோ ரோலில் கார்த்தி.. யார் படத்தில் தெரியுமா.?

Karthi : கார்த்தி இப்போது சர்தார் 2 படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக கைதி 2 படமும் லயன் அப்பில் இருக்கிறது. விக்ரம் படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டில்லியின் குரல் மட்டும் வந்த நிலையில் கார்த்தி நடிக்கவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.

இது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தாலும் கங்குவா படம் பெரிய அளவில் போகவில்லை. இதை அடுத்து பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் கெஸ்ட் ரோலில் கார்த்தி நடிக்கிறார்.

பிரபல நடிகர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கார்த்தி

நானி நடிப்பில் உருவாகி வருகிறது ஹிட் 3 படம். சைலேஷ் கொலனு இயக்கத்தில் வால் போஸ்டர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் ஹிட் மற்றும் ஹிட் 2 படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஹிட் 3 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதில் கெஸ்ட் ரோலில் கார்த்தி நடிக்கிறார். இதில் கார்த்தியின் அறிமுகம் மட்டும்தான் இடம் பெற உள்ளதாம்.

அடுத்ததாக ஹிட் 4 எடுக்க உள்ள நிலையில் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால் கார்த்தியின் முந்தைய படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. மேலும் சர்தார் 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஹிட் 3 படத்தில் நடிப்பது இன்ப அதிர்ச்சி தான்.

Leave a Comment