Karthi : கார்த்தி நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் தான் சர்தார் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பி எஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இவ்வாறு செகண்ட் பார்ட் படங்களை கார்த்தி நம்பி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்களும் அவருக்கு வரிசை கட்டி இருக்கிறது.
அதாவது மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் படத்தை எடுத்தவர் தமிழ். இவருடனும் ஒரு படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.
சிம்பு பட இயக்குனருடன் கூட்டணி போடும் கார்த்தி
இது தவிர சிம்புவின் ஆஸ்தான இயக்குனரான கௌதம் மேனன் உடன் கார்த்தி இணைய இருக்கிறார். பொதுவாகவே கௌதம் மேனன் சாக்லேட் பாய் போன்ற கதாபாத்திரங்கள் தான் அதிகமாக எடுத்து வருவார்.
ஆகையால் கார்த்தி உடன் இவர் இணையும் படமு பையா போன்ற ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அதோடு கௌதம் மேனன் இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்தவுடன் சிறிது இடைவெளி எடுத்து கார்த்தியின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.