செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெற்றி இயக்குனரை மதிக்காத கார்த்தி.. அதுக்குன்னு இப்படியா பழி தீர்ப்பது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதுமட்டும்இன்றி தற்போது வசூலில் வாரி குவித்து வருகிறது. இதனால் சர்தார் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி அன்று கார்த்தி வீட்டில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகப் பரவியது.

Also Read : கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

மேலும் இந்த விழாவில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டு ஆடிப்பாடி தீபாவளியை கொண்டாடு இருந்தார். இதில் கார்த்தி பட இயக்குனர் பி எஸ் மித்ரன் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் சர்தார் படப்பிடிப்பு தளத்தில் கார்த்தி மற்றும் மித்ரன் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இயக்குனர் இல்லாத சமயத்தில் கார்த்தி சர்தார் படத்தில் டப்பிங் பேசியுள்ளார். இதனால் மித்ரன் வந்த பிறகு இது சரியில்லை, அது சரியில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் டப்பிங் பேச சொன்னாராம். இது மேலும் கார்த்தியை கடுப்பேற்றி உள்ளது.

Also Read : சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

கார்த்தி தீபாவளி விழாவில் சர்தார் பட உதவி இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லோருக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கியுள்ளனர். ஆனால் மித்ரனை மட்டும் கார்த்தி இவ்விழாவுக்கு அழைப்பு விடுக்க வில்லையாம்.

இதிலிருந்து கார்த்தி, மித்ரன் பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. சர்தார் படம் நல்ல வசூலை பெற்று தந்து வரவேற்பை பெற்றாலும் தங்களுக்குள் உள்ள பிரச்சனையை மறக்காமல் இவர்கள் பெரிதாக்கி வருகிறார்கள்.

Also Read : அதிரடி சரவெடி, கார்த்தியின் சர்தார் முழு விமர்சனம்.. பேன் இந்தியா தரத்தில் ஒரு தமிழ் படம்

Trending News