ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அசுரத்தனமான கொலைகாரனுக்கு கால் சீட் கொடுத்த கார்த்தி.. வெற்றிக்காக போராடும் இயக்குனர்

Karthi who gave the call seat to taanakkaran film director: மணிரத்தினத்தின் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்தது அதனை  அடுத்து உண்மையான சம்பவத்தை பின்ணனியாக கொண்டு உருவான கார்த்தியின் 25வது படம் ஜப்பான். 

சிறுத்தை படத்தை போன்று ஜப்பான் திரைப்படத்தை எதிர்நோக்கி இருந்த கார்த்திக்கு எதிர்பார்ப்பை விட ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பின் கதை தேர்வில்  கவனமுடன் இருக்கும் கார்த்தி தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படத்திலும், நலன் குமாரசாமி இயக்கும்  வா வாத்தியாரே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும் கார்த்தியின் வெற்றி படங்கள் ஆன லோகேஷ் கனகராஜின் கைதி,இயக்குனர் ஹச் வினோத்தின் தீரன் அதிகாரம் மற்றும் சர்தார் போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனால் கார்த்தியின் ரசிகர்களும் ஜப்பான்  படத்தின் தோல்வியை ஈடு கட்டும் படியாக உள்ளது இரண்டாம் பாகம் என மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

Also read: கைவிட்ட கமலால் எச் வினோத் செய்த ராஜதந்திரம்.. திமிங்கலத்தை விட்டுட்டு 2 சுறாக்கு விரித்த வலை

ஆனால் தற்போது அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தரமான திரை கதையுடன் உள்ள செம டைரக்டரை கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்துள்ளார் கார்த்தி. வெற்றி மாறனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் அசுரன் படத்தில் கொலைகாரனாக  சில காட்சிகளில் வந்து மிரட்டி இருந்தார். அதை தவிர ஜெய் பீம் படத்தில் முரட்டு போலீசாக வந்து தரமான சம்பவம் செய்திருந்தார்.

இயக்குனர் தமிழின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வெளிவந்த டாணக்காரன் திரைப்படம் ஓடிடி யில்  ரிலீஸ் ஆகி சிறப்பான வரவேற்பை பெற்றது இதற்குப் பின் இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு படமும் இயக்காத நிலையில் ஒரு கேங்ஸ்டர் கதையை கார்த்தி இடம் சொல்ல கார்த்திக்கு பிடித்து போய்  வாய்ப்பு கொடுத்து விட்டாராம். 

வடசென்னை படத்தை போன்று டைம் பீரியட் கதையுடன் கடலோர கிராமங்களில் நடக்கும் அதிகார போட்டியை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரி படமாக உள்ளது. தமிழின் டாணக்காரன் படத்தைப் போன்று அதிகார வர்க்கத்தை சீண்டும் வகையில் தரமான வசனங்களுடன் அரங்கேற உள்ளது கார்த்தியின் இந்த கேங்ஸ்டர் ஸ்டோரி.

Also read:நடிகர் சங்கத்திற்காக ஆரம்பிச்சு, நாசமா போன படம்.. வெட்டியா சீன் காட்டிட்டு இருக்கும் விஷால், கார்த்தி

Trending News