வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான கார்த்தி.. எம்ஜிஆராக எடுக்கும் புது அவதாரம்

கார்த்தியின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்த அந்த திரைப்படத்தால் கார்த்தியின் மார்க்கெட்டும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. அதனாலேயே கார்த்தி தற்போது தேர்ந்தெடுக்கும் கதைகளை மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read : திமிரை விட்டுக் கொடுக்காமல் உச்சாணி கொம்பிலே நின்ற நடிகர்.. இறங்கி வந்த எம்ஜிஆர், சிவாஜி

இந்தப் படத்தின் கதை சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு சாதாரண மனிதன் ஸ்பிலிட் பர்சனாலிட்டி பிரச்சனையால் எம்ஜிஆர் ஆக மாறிவிடுகிறார். தன்னை எம்ஜிஆர் ஆக நினைக்கும் அந்த மனிதர் பொதுமக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்ய ஆரம்பிக்கிறார். இதுதான் படத்தின் கதை.

இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் கார்த்தி நடிக்கிறார். அதாவது இந்த திரைப்படத்திற்காக கார்த்தி எம்ஜிஆர் ஆக புது அவதாரம் எடுக்க இருக்கிறார். தமிழ் சினிமா ஜாம்பவானாக இருந்த எம்ஜிஆர் பிற்காலத்தில் அரசியல் தலைவராக மாறி பொதுமக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை செயல்படுத்தினார்.

Also read : பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பிஎஸ் மித்ரன்.. கமலைப் போல் 50 லட்சத்துக்கு பரிசை வாரி இறைத்த கார்த்திக்

அதனால்தான் அவருக்கு இப்போது வரை தமிழ் மக்கள் மனதில் ஒரு நிலையான இடம் இருக்கிறது. அப்படி ஒரு பெரும் தலைவர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி உள்ளது. மேலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பட குழு நம்பிக்கையாக தெரிவித்துள்ளது.

சூது கவ்வும் என்ற வித்தியாசமான கதையின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நலன் குமாரசாமி அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read:எம்ஜிஆரை கிண்டல் செய்யும் ஒரே நடிகர்.. கடைசி வரை தலைவலி கொடுத்த நலவிரும்பி

Trending News