வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மனைவியால் படாத பாடுபடும் கார்த்தி.. புது குண்டை தூக்கி வீசிய பயில்வான்

திரைப்படங்களில் நடித்திருந்தாலும் யூடியூப் நிகழ்ச்சிகளின் மூலம் தான் பயில்வான் ரங்கநாதன் அதிக அளவில் பிரபலம் அடைந்தார். அதிலும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக போட்டு உடைப்பது தான் இவருடைய ஸ்டைல். அதனாலேயே இவர் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி வருகிறார்.

இருந்தாலும் சினிமாவில் இருக்கும் தப்பை நான் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் இவர் பல சமயங்களில் இல்லாததையும் உளறிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் இவர் தற்போது சிவகுமாரின் வீட்டில் ஒரு புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது கார்த்தியின் மனைவி அவரை ரொம்பவும் டார்ச்சர் செய்வதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.

Also read: எக்ஸ் காதலியை தூக்கி விட நினைத்த கார்த்தி.. மனைவியால் தவிடு பொடியான திட்டம்

தற்போது அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களின் மூலம் முன்னேறிக் கொண்டிருக்கும் கார்த்தி கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். எப்போதுமே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கார்த்தி பற்றி எந்த ஒரு அவதூறான செய்திகளும் இதுவரை வந்தது கிடையாது.

ஆனால் பயில்வான் கார்த்தி ஹீரோயின்களுடன் அதிக நெருக்கம் காட்டி நடிப்பது அவரின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த தகவலை கார்த்தியே கூறியதாகவும் சொல்லி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் லாபமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

Also read: நான் மாஸ் ஹீரோன்னு சிவகார்த்திகேயன் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. இப்பவும் கழுத்தை நெரிக்கும் கடன்

அதன் பிரமோஷனுக்காக கார்த்தி பல விஷயங்களை ரசிகர்களின் முன்பு ஷேர் செய்து வந்தார். அப்போது நகைச்சுவைக்காக தன் மனைவி கூறிய ஒன்றையும் தெரிவித்திருந்தார். அதாவது நீங்கள் ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் படங்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது, அப்படியே ட்ரை பண்ணுங்கள் என்று அவர் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இது அந்த பிரமோஷன் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் பொருட்டு கார்த்தி கொஞ்சம் மிகைப்படுத்தி கூறியது என அனைவருக்கும் தெரியும். ஆனால் பயில்வான், கார்த்தி இப்படி கூறியதை கொஞ்சம் திரித்து சொல்லி இருக்கிறார். இது இப்போது பெரும் பிரச்சனையாக கொழுந்து விட்டு எரிகிறது. அதனால் ரசிகர்கள் பயில்வான் தேவையில்லாமல் இது போன்ற விஷயங்களை கிளப்பி விடுகிறார் என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Also read: நயன்தாராவை ஓரம் கட்ட நினைத்த நடிகை.. கரியை பூசி அனுப்பிய 3 இயக்குனர்

Trending News