Actor Karthi: பொன்னியின் செல்வனுக்கு பிறகு கார்த்தியின் நடிப்பில் ஜப்பான் படம் வெளிவர இருக்கிறது. வித்தியாசமான கதைகளம் கொண்ட இப்படத்தை ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே கார்த்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது விஜய் சேதுபதி பட இயக்குனரை லாக் செய்து இருக்கிறார். அதாவது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தை இயக்கியவர் தான் பிரேம்குமார். இளைஞர்களை பெரிதும் கவர்ந்த காதல் படமான 96 இப்போது வரை பலரின் ஃபேவரைட் படமாக இருக்கிறது.
அதனாலேயே கார்த்தி இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு சம்மதத்திருக்கிறார். மேலும் இப்படமும் காதல் காவியமாக தான் உருவாக இருக்கிறது. அப்படி பார்த்தால் வந்தியதேவனாக பெண்களை கவர்ந்த கார்த்தி தற்போது காதல் நாயகனாக மாற இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அரவிந்த்சாமியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். பிசி ஸ்ரீராம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தகவலை தற்போது பிசி ஸ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Also read: மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா
கார்த்தியும் அவருடைய பதிவிற்கு நான் உங்களுடன் பணிபுரிவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் திரிஷா தான் இந்த படத்தின் ஹீரோயினா என்று ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
ஏனென்றால் பொன்னியின் செல்வனில் இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் 96 படத்தில் ஜானுவாக இவரின் நடிப்பும் பட்டையை கிளப்பியது. அந்த வகையில் இந்த ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.