திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

காலில் அடிபட்டு மருத்துவமனையில் கார்த்திக்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒரு காலத்தில் நவரச நாயகன் என அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.

தற்போது சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அனேகன் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன அதனால் தற்போது தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்திக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது அதனால் அவரது காலில் அடிபட அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர் தற்போது மீண்டும் அதே காலில் அடிபட்டு உள்ளது.

karthik-cinemapettai
karthik-cinemapettai

அதாவது நடிகர் கார்த்திக் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழ அவரது காலில் அடிபட்டு உள்ளது அறுவை சிகிச்சை செய்த காலையிலேயே அடிபட்டதால் காலில் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

அதனால் கார்த்திக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது வீட்டில் அவர் ஓய்வு பெற்று வருவதாகவும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -spot_img

Trending News