வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தொடர்ந்து 3 தோல்வி படங்கள்.. இயக்குனரை கைப்பிடித்து தூக்கிவிட போகும் கொம்பன் கார்த்திக்!

தென்னகத்தின் பாரம்பர்யத்தையும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாழ்வியல் முறை மற்றும் சடங்குகளை சரியாக எடுத்துக்காட்டுவதில் வல்லவர் இயக்குனர் முத்தையா.

குட்டிப்புலி என்கிற படத்தின் வாயிலாக திரையில் இயக்குனராக ஜொலித்தவருககு தொடர் வெற்றி மழை பொழிந்தது குறிப்பிட்ட சில படங்கள். குட்டிப்புலியில் அம்மா மகன் பாசத்தை காட்டிய முத்தையா கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடைப்பட்ட நெருக்கத்தை காட்டியது அடுத்ததாய் வந்த மருது அப்பத்தாவிற்கும் பேரனுக்குமான பாசத்தை பார்போற்ற வைத்தது.

அடுத்தடுத்த படங்கள் வணிகரீதியில் சிரமப்பட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். முத்தையா அக்கா, தம்பி பாசத்தை காட்டும் தேவராட்டமா புதமாப்பிள்ளை மீது பாசம் வைத்த குடும்பம் என்ற புலிக்குத்து பாண்டியா அத்தனையும் தனித்துவம் மிக்கவை.

komban2-cinemapettai
komban2-cinemapettai

என்னவாக இருந்தாலும் ஒரே சமுதாய சடங்குகளை காட்டுவதில் சில ஏற்றங்களும் உண்டு அதே போல வீழ்ச்சிகளும் தவிர்க்க முடியாதவையே. இப்போது பொன்னியின் செல்வனில் பிசியாக இருக்கும் கார்த்தி அடுத்ததாய் இயக்குனர் முத்தையாவுடன் இணையவிருக்கிறார்.

மீண்டும் கொம்பனுக்கு நிகராக ஒரு வெற்றிப்படத்தை இயக்க தயாராகிறார் இயக்குனர் முத்தையா. என்னதான் இருந்தாலும் திரைக்கதையை எளிதாக கணிக்கும் வகையில் இல்லாத படங்கள் மட்டுமே இப்போதைக்கு வெற்றிப்படங்களாக வலம் வருகின்றன.

Trending News