வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கார்த்திக் பட நடிகைக்கு நடந்த பா**ல் தொல்லை.. தட்டி கேட்பாரா ஜெய் பீம் சூர்யா

நடிகர் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது துணை நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகமாக தங்கும் பிரபல நட்சத்திர விடுதியாக ஏ பி எம் ஹோட்டலில் விருமன் படப்பிடிப்பு குழுவினர் மொத்தமாக வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அதே ஹோட்டலில் தான் நடிகர் கார்த்தி உட்பட அனைவரும் தங்கியுள்ளனர்.

அப்போது புதுச்சேரி மாநிலம், பூமியான் பேட்டையை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி இப்படத்தில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவரும் அந்த ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். அப்போது படக்குழுவை சேர்ந்த 5 பேர் அவரை பா**ல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா சமீபத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நியாயம் வாங்கித்தரும் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

சினிமாவில் நீதிக்காக போராடிய சூர்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வாங்கித் தருவாரா என்று தேனி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து சமூகம் சார்ந்த கருத்துக்களை கூறி வரும் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இந்த பிரச்சனையில் தலையிட்டு முடித்து வைப்பார்களா என்றும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Trending News