வாலிபத்தில் மன்மதன்.. என்னென்ன வேலை பார்த்திருக்கிறார்.. பானுப்ரியாவிடம் நாடகம் போட்ட நடிகர்

bhanupriya

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. கருப்பு நிறம், முட்டக் கண்ணு, வசீகர முகம், இயல்பான நடிப்பு, அபார நடனம் என தனித்துவ குணங்களை கொண்டு ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே அந்த காலத்தில் இருந்தது. இவர் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் படங்களாகவே அமைந்தது. இவர் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

பிஸியான படங்கள் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் நடிகை பானுப்ரியாவிற்கு திருமணத்திற்கு பிறகு, நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சனை வந்திருக்கிறது. சென்னையில் மிகப்பெரிய வீடு இருந்தது, சொந்த பிரச்சனை காரணமாக அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிறகு ஏ.வி.எம் சரவணன் தன்னுடைய ஸ்டூடியோவில் உள்ள ஒரு அறையை கொடுத்து தங்க வைத்திருக்கிறார். இன்று இவர் நிலை பரிதாபமாக இருந்தாலும், ஒரு காலத்தில் பல நடிகர்கள் இவரை கவர போட்டி போட்டுகொண்டு இருந்தார்கள். அதில் நடிகர் கார்த்தியும் ஒருவர்.

பானுப்ரியாவை ஏமாற்றிய கார்த்திக்

கார்த்திக்கும், சேர்ந்து பாடும் பறவை, கோபுர வாசலிலே, சக்கரவர்த்தி, அமரன் என பல படத்தில் நடித்துள்ளனர். இருவரது கெமிஸ்ட்ரியும் பயங்கரமாக இருக்கும். ஒருநாள் கார்த்திக்கின் கெஸ்ட் ஹௌஸிற்கு, பானுப்ரியா சென்றுள்ளார்.

அப்போது கார்த்திக், காலில் கட்டுடன் படுத்திருந்தார். கட்டைப்பார்த்து பயந்து போன, பானுப்பிரியா என்ன ஆச்சு என்று கேட்க, அவர் வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லி இருக்கிறார். வழுக்கி விழுந்தா இவ்வளவு பெரிய காயம் வராதே,மாடியில் இருந்து குதித்தீர்களா என்று கேட்க இல்லை என்று சொல்ல, சந்தேகம் அடைந்த பானுப்பிரியா கட்டைப்பிரிந்து பார்த்தால், காயமே இல்லை அது பானுப்பிரியாவை ஏமாற்ற பார்த்த வேலை என்று தெரிய வந்திருக்கிறது.

அவரின் sympathy-யை பெற தான் இவர் இந்த வேலையை பார்த்துள்ளாராம். மேலும் கார்த்திக், பானுப்ரியாவை சம்பளம் சம்மந்தமாக பயங்கரமாக ஏற்றி விடுவாராம். இதை கேட்டு, பானுப்ரியா நடந்து கொள்ள, அவரை தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் புறம்தள்ள பார்த்தாராம்.

சின்ன வயதில் இவர் இவ்வளவு லீலைகள் செய்திருக்கிறாரா என்று நெட்டிசன்ஸ் தற்போது கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner