செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கார்த்திக் உயிரை விட்டு நடித்த 5 படங்கள்.. இதில் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்

நவரச நாயகன் கார்த்திக், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவருடைய படங்கள் அதிக நகைச்சுவை தன்மையுடன் இருக்கும். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகன் விருதை பெற்றார். தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் திரைப்படங்களில் இறந்த காட்சிகளின் படங்களை பார்க்கலாம்.

மௌன ராகம்: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடித்து வெளியான படம் மௌன ராகம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரேவதியின் காதலனாக இப்படத்தில் கார்த்திக் நடித்து இருந்தார். போலீஸாரால் துப்பாக்கி சூடு நடைபெறும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு கார்த்திக் மேல் பட்டு இறந்துவிடுவார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

பூவரசன்: கோகுல கிருஷ்ணா இயக்கத்தில் எம் கபார் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பூவரசன். இப்படத்தில் கார்த்திக், ரச்சநா பானர்ஜி, விஜயகுமார், சுஜாதா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விஜயகுமார், சுஜாதாவின் மகன் கார்த்திக் என தெரியவரும் பொழுது கார்த்திகை ராதாரவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவார்.

காத்திருக்க நேரமில்லை: குலோத்துங்கன் இயக்கத்தில் 1993 இல் வெளியான திரைப்படம் காத்திருக்க நேரமில்லை. இப்படத்தில் கார்த்திக், குஷ்பூ, சிவரஞ்சனி, நாசர், வடிவேலு என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் இறுதியில் நாசர் கார்த்திக்கை கத்தியால் குத்திக் கொன்றுவிடுவார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

என் ஜீவன் பாடுது: கார்த்திக், சரண்யா, மனோரமா என பலரும் நடித்து வெளியான திரைப்படம் என் ஜீவன் பாடுது. ஆர் சுந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக் சுரேந்திரன் ஆகவும், சரண்யா நர்மதாவும் நடித்திருந்தார்கள். இருவரும் காதலித்து இறுதியில் சேர முடியாமல் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

அனேகன்: கேவி ஆனந்த் இயக்கிய, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவானது அனேகன் திரைப்படம். இப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ், கார்த்திக், அதுல் குல்கர்னி நடித்திருந்தார்கள். இப்படத்தில் கார்த்திக் ரவிகிரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் கடைசி காட்சியில் இறந்து விடுவார் கார்த்திக்.

Trending News