வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் பல இயக்குனர்கள் சசிகுமாரை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.  இப்படம் ஒரு கிராமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு காரி என்ற வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார்கள். காரி என்பது ஒரு வகையான மாட்டினத்தின் பெயரை குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதால், கதையும் வித்தியாசமாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

jyothika-sasikumar
jyothika-sasikumar

சசிகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ஒரு கட்டத்தில் படம் இயக்குவதை விட்டு விட்டு படம் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களை நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் நடிப்பில் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News