வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கார்த்திகை தீபம் சீரியலில் எல்லா உண்மையும் கண்டுபிடித்த கார்த்திக்.. தீபாவை காப்பாற்ற போராடும் மொத்த குடும்பம்

Karthigai Deepam Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஐஸ்வர்யா போலீஸ் இடம் இருந்து தப்பித்து விட்டதால் தீபாவுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என்பதால் ஐஸ்வர்யாவை பிடித்து விட வேண்டும் என்று போலீஸ் நாலா பக்கமும் தேடி வருகிறார்கள். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட்டு ஐஸ்வர்யா, தீபா இருக்கும் கோவிலுக்கு வந்து விடுகிறார்.

பிறகு தீபாவை சந்தித்து ஐஸ்வர்யா கொலை செய்யும் முயற்சியில் துப்பாக்கி வைத்து சுடப் போகிறார். இதை பார்த்த சக்தி ஐஸ்வர்யாவிடம் இருந்து தீபாவை காப்பாற்றி வேனில் ஏற்றி கூட்டு போகிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் துப்பாக்கி பாம்பு இருக்கும் புற்றில் விழுந்துவிட்டது. அதனால் துப்பாக்கியை எடுத்துவிட்டு தீபாவை கொலை செய்யணும் என்று தைரியமாக பாம்பு புற்றில் கை விடுகிறார்.

ஆனால் அங்கு இருந்த பாம்பு ஐஸ்வர்யாவை கொட்டி விடுகிறது. ஆனால் அது கூட தெரியாமல் கச்சேரி நடக்கும் இடத்திற்கு போய்விடுகிறார். இதற்கிடையில் கார்த்திக் காரில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததால் போலீஸ் விசாரிப்பதற்காக கீதா மற்றும் கார்த்திகை கூட்டிட்டு விசாரிக்கிறார்கள். ஆனால் கார்த்திக்கு ஆசிரமத்தில் தான் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று சொல்லிய நிலையில் போலீஸ் ஆசிரமத்திற்கு சென்று சிசிடிவி கேமரா மூலம் செக் பண்ணி பார்க்கிறார்.

அப்படி பார்க்கும் பொழுது ரூபஸ்ரீ தான் கார்த்திக் காரில் அந்த தடை செய்யப்பட்ட பொருளை போட்டுப் போய் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அந்த வீடியோவை ஃபோனில் ஏற்றுக்கொண்டு வருகிறார். பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நடந்த உண்மையை சொல்லி கார்த்திக் மற்றும் கீதா மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார்.

அத்துடன் உங்க காரில் தடைசெய்யப்பட்ட பொருளை வைத்தது ரூபஸ்ரீ தான் என்று உண்மையும் சொல்லிவிடுகிறார். இதை கேட்டதும் கார்த்திக், ஐஸ்வர்யா அண்ணியுடன் சேர்ந்து தான் ரூபஸ்ரீ இந்த வேலையை பார்த்திருப்பார் என்று சொல்கிறார். உடனே போலீஸ் ஐஸ்வர்யாவும் எங்கள் கஸ்டடியில் இருந்து தப்பித்து விட்டார். போகும் பொழுது என்னுடைய துப்பாக்கியும் எடுத்துட்டு போய் விட்டார் என்று சொல்கிறார்.

அதனால் நேரடியாக தீபாவை தாக்குவதற்காக தான் ஐஸ்வர்யா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு போன் பண்ணி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் என போலீஸ் சொல்லுகிறது. ஆனால் கார்த்திக், இப்போதைக்கு குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால் அவங்க ரொம்ப பயந்து போய் விடுவாங்க என்று எல்லா உண்மையும் தெரிந்து கொண்ட கார்த்திக் கச்சேரி நடக்கும் இடத்திற்கு போகிறார்.

அதே நேரத்தில் தீபாவை கச்சேரி நடக்கும் இடத்திற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். இருந்தாலும் எந்தவித பிரச்சனையும் வராமல் தடுப்பதற்காக மொத்த குடும்பமும் போராடி வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யாவிடம் இருந்து தீபா தப்பித்து இருந்தாலும் துர்கா வந்து எப்படியாவது பிரச்சனை பண்ணுவார். அதனால் கீதா, தீபாவை காப்பாற்றுவதற்காக பலியாடாக சிக்கி விடுவார்.

Trending News