புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாஸ் கிளப்பில் இடத்தை பிடித்த கார்த்தி.. எல்லாம் அந்த மதுரை சம்பவம் தான்

கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியான படம் மிகப் பெரிய ஹீரோக்களின் படத்தை போல முதல் நாளிலேயே பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்தி எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு அந்த நம்பிக்கையை கார்த்தி இந்த படத்திலும் காப்பாற்றியிருக்கிறார்.

முத்தையா பொருத்தவரை உறவுகளும் பாசம் எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமே தன்னுடைய படத்தில் வலியுறுத்தி வருகிறார் அந்த வரிசையில் இந்த படமும் பாசத்தையும் உறவுகளையும் வலியுறுத்தியுள்ளது. முத்தையாவும் கார்த்தியும் ஏற்கனவே இணைந்து உருவாக்கிய கொம்பன் படமும் மதுரையை சுற்றி அமைந்தது அது போலவே இந்த படமும் மதுரையை கதைக்களமாக கொண்டு உள்ளது, இதனால் தென்மாவட்டங்களில் இந்த படம் மிகவும் அதிகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திக்கு கிராமத்து கதை ஒன்றும் புதியது அல்ல அவருடைய முதல் படமே கிராமத்து கதைக்களத்துடன் வந்த பருத்தி வீரன் தான். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பால் வட்டார பேச்சினாலும் அனைவராலும் ரசிக்கப்பட்ட கார்த்திக்கு தென்மாவட்டங்களில் ரசிகர்கள் அதிகம்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த குடும்ப பின்னணியை கொண்ட கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இன்று வெளியாகியுள்ள விருமன் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் வசூலை விட மூன்று மடங்கு அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்திற்காக அண்ணன் தம்பி இருவரும் புரமோஷனில் பிச்சு உதறினர். குறிப்பாக அந்த மதுரை புரமோஷனில் பட்டையை கிளப்பி விட்டனர்.

விருமன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இந்த படத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விட்டது இதற்கு கார்த்தியின் கிராமத்து நடிப்பும் ஒரு மிக முக்கிய காரணம், இன்று இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. சந்தானம், ஜெயம்ரவி, விஷாலின் படங்களுக்கு இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு கார்த்திக்கு வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.

ஏற்கனவே முத்தையா கார்த்தி இவர்களின் கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் ஒரு மிகப் பெரிய வசூலை தந்தது, இன்று வெளியாகியுள்ள விருமன் திரைப்படம் கார்த்தியின் சினிமா பயணத்தில் கொம்பனை தொடர்ந்து அடுத்து ஒரு பிளாக்பஸ்டர் என்று படத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக ஆனதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் என்று அதிதி சங்கரை சொல்லலாம். இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் வரப்போகிறார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான உடனே அதிதி ஷங்கரை பற்றி கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். மேலும் அதிதி சங்கர் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் தனது இயல்பான பேச்சு எதார்த்தமான முகம் என்று படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனக்கென்று ஒரு ரசிகர் கோட்டையை உருவாக்கிவிட்டார்.

கிராமத்து பெண்ணாக தேன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் துறுதுறுவென நடித்து இன்று அவர் ரசிகர்கள் இடையே ஒரு மிகப்பெரிய பாராட்டியே வாங்கிவிட்டார். ஷங்கரின் மகள் என்றால் சும்மாவா!

Trending News