செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மாப்பிள்ளை கெட்டபில் ஷூட்டிங் வந்த கார்த்திக்.. இயக்குனர் கொடுத்த பல்பால் காண்டான நவரச நாயகன்

80, 90 காலகட்டத்தில் ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருந்தவர் தான் நடிகர் கார்த்திக். துரு துரு என இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றி வாகை சூடியது. இவருடைய மகனே இப்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில் கூட இவர் இப்போதும் பலரின் ஃபேவரைட் ஹீரோவாக இருக்கிறார்.

அந்த வகையில் எப்போதுமே ஜாலியாக இருக்கும் இந்த நவரச நாயகன் இயக்குனரிடம் பல்பு வாங்கி காண்டான ஒரு சம்பவமும் இருக்கிறது. அதாவது 90 காலகட்டத்தில் சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் வெளிவந்த அத்தனை படங்களும் வெற்றிவாகை சூடியது. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களுடைய வெற்றிப் பயணம் மேட்டுக்குடி உட்பட பல படங்கள் வரை தொடர்ந்தது.

Also read: மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

அதன் காரணமாகவே கார்த்திக், சுந்தர் சி படம் என்றால் உடனே ஓகே சொல்லி விடுவாராம். அப்படித்தான் உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்திற்காக சுந்தர் சி கார்த்திக்கை அணுகிய போது அவர் கதையை கேட்காமல் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இயக்குனர் மீது அவருக்கு பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது கார்த்திக் என்ன சீன் என்று கேட்டிருக்கிறார். உடனே அவர்கள் கல்யாண சீன் எடுக்க போகிறோம் என்று சொன்னதும் அவர் உடனே மாப்பிள்ளை போல் தயாராகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாராம். இதைப் பார்த்து அதிர்ச்சியான சுந்தர்.சி சார் உங்களுக்கு கல்யாணம் கிடையாது. நீங்கள் ஒரு கல்யாணத்துக்கு வருவது போன்ற சீன் தான் எடுக்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

Also read: ஓவர் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெற்ற 5 நடிகைகள்.. தவம் கிடந்து சான்ஸ் கொடுக்கும் சுந்தர் சி

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கார்த்திக் உடனே டென்ஷன் ஆகி முதலில் கதையை சொல்லுங்கள், அப்புறம் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் அமர்ந்து அவருக்கு கதையை முழுவதுமாக சொல்லி இருக்கின்றனர்.

பயங்கர காமெடியாக இருந்த அந்த கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த கார்த்திக் உடனே ஷாட்டுக்கு ரெடி என்று கூறினாராம். இப்படி கதை கேட்காமல் நடிக்க வந்து இயக்குனரிடம் பல்பு வாங்கினாலும் அந்த படம் அவருக்கு ஒரு ஹிட் படமாகவே அமைந்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கார்த்திக், சுந்தர் சி கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: சுந்தர்சிக்கு வாழ்க்கை கொடுத்த படம்.. முதல் வாரத்துக்குப் பின் பட்டையை கிளப்பிய வசூல்

Trending News